Tuesday, August 21, 2007

'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்!

வைகோவின் ‘தேன் மலர்கள்’ வெளியீடு சென்னையில் எழுச்சிமிகு விழா!

வைகோ ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொகுத்து ‘தேன் மலர்கள்’ என்ற நூல் வடிவில் இராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இதற்கான விழா 14.8.2007 செவ்வாய் அன்று சென்னை ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகர் அரங்கில் நடைபெற்றது. நாஞ்சில் சம்பத் விழாவுக்கு தலைமை ஏற்க, கலைப்புலி எஸ்.தாணு வரவேற்புரை ஆற்றினார். நூலை அருட்செல்வர் ந.மகாலிங்கம் வெளியிட, ‘கல்கி’ ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அப்துல்காதர், சுதா சேஷ்ய்யன், திரைப்படக் கலைஞர் பிரகாஷ்ராஜ், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளச்சேரி மணிமாறன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அபிதாசபாபதி அழகுத் தமிழில் தொகுத்து வழங்கினார்.

'தேன்மலர்கள்’ விழாவில் தேன்துளிகள்:

‘தேன்மலர்கள்’ என்னும் இலக்கியச் செறிவுமிக்க நூலைப்படைத்துள்ள தலைவர் வைகோ அவர்களை தமிழ்த்தாய் வாடிநத்துகிறாள். தமிழ் ஈழம் வாழும்காலம் வரை வைகோ வாழவேண்டும். வைகோ ஆயுள் வளரட்டும். தமிழ் உலகு மீளட்டும்.
- பேராசிரியர் அப்துல் காதர்


தமிழ் காலத்தால் மூத்தது. உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. அத்தகைய தமிழுக்கு உரமூட்டக்கூடியவகையில் இலக்கியச் செறிவு மிகுந்த ‘தேன்மலர்கள்’ என்னும் இந்நூல் மணம் வீசுகிறது.
- அருட்செல்வர் ந. மகாலிங்கம்


கம்பனுக்கு ஒரு டி.கே.சி. கிடைத்ததைப்போல, அமரர் கல்கிக்கு வைகோ கிடைத்திருக்கிறார். ‘தேன்மலர்கள்’ படைத்த வைகோ நடமாடும் இலக்கியச் சுரங்கமாகத் திகழ்கிறார்.
- கல்கி ராஜேந்திரன்


இராகவ அய்யங்கார் அவர்களது ‘தமிழ் வரலாறு’ என்கிற நூல் கிடைக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த பலருக்கு உண்டு. டாக்டர் மு.வ.அவர்களது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்கின்ற நூல்கூட பல இடங்களில் கிடைப்பது இல்லை. ஆனால், வைகோ அவர்களது ‘தேன்மலர்கள்’ என்கிற நூல் அந்த ஏக்கங்களைத் தீர்த்துவிட்டது.
- டாக்டர் சுதா சேஷய்யன்


நல்ல குழந்தையைப் பெற்றவர்களை ஒருதலைமுறை பேசும்; கலைநயத்தோடு கட்டப்படும் ஒரு வீடு இரண்டு தலைமுறைகளுக்குப் பேசப்படும். நல்ல புத்தகத்தைப் படைத்தவரை மூன்று தலைமுறை பேசும். இந்தத்´ ‘தேன்மலர்கள்’ என்கின்ற புத்தகத்தைப் படைத்த வைகோ அய்யா அவர்களை எல்லாத் தலைமுறையும் பேசும்.
- நடிகர் பிரகாஷ்ராஜ்

No comments: