Saturday, August 4, 2007

தொண்டாமுத்தூர் தொகுதி வளர்ச்சிக்கு ரூ.1.20 கோடி: ம.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் மு.கண்ணப்பன் ஒதுக்கீடு


பெ.நா.பாளையம், ஆக.5: தொண்டாமுத்தூர் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியங்கள், கவுண்டம்பாளையம் நகராட்சி ஆகிவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்கென தனது தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் இந்த ஆண்டு ரூ.1.20 கோடி நிதியை தொண்டாமுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் மு.கண்ணப்பன் ஒதுக்கியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2007- 2008 நிதியாண்டில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பெ.நா.பாளையம் பேரூராட்சியில் ஜோதிபுரம் பகுதியில் கழிப்பிடம் அமைக்க ரூ.3 லட்சம், துடியலூர் பேரூராட்சியில் ஊனமுற்றோர் பள்ளி சுற்றுச் சுவர் அமைக்க ரூ.1 லட்சம், 50 சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.2.10 லட்சம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.1.22 லட்சம், பூச்சியூரில் கழிப்பிடம் கட்ட ரூ.2.70 லட்சம், வீரகேரளம் பேரூராட்சியில் சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.1.02 லட்சம், தென்றல் நகர்,சுண்டப்பாளையம் பகுதிகளில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் சம்ப்கள் கட்ட ரூ.6.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


குருடம்பாளையம் ஊராட்சியில் வடமதுரை, குமரபுரம் பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் கட்ட ரூ.5 லட்சம், அருணா நகர் குறுக்குச் சாலைகள் சீரமைப்பிற்கென ரூ.4 லட்சம், பன்னிமடை ஊராட்சி திப்பனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட ரூ.1.90 லட்சம், 20 சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.84 ஆயிரம், காங்கிரீட் சாலைகள், படிக்கட்டுகள் அமைக்க ரூ.2.05 லட்சம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.4 லட்சம், அசோகபுரம் ஊராட்சியில் தார் சாலை அமைக்க 2 லட்சம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் தார் மற்றும் காங்கிரீட் சாலைகள் அமைக்க 2.65 லட்சம், வீரபாண்டி ஊராட்சியில் ஆனைகட்டி மலைகிராமங்களில் சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.47 ஆயிரம், மேல்நிலைத் தொட்டி அமைக்க ரூ.2 லட்சம், 135 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை பழுது பார்க்க ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.58.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம்: தொண்டாமுத்தூர் பேரூராட்சி சுள்ளிபாளையத்தில் பாலம் அமைக்க ரூ.6.50 லட்சம், நேதாஜி நகரில் காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.3 லட்சம், 6, 7, 8 வார்டுகளில் கழிப்பிடங்கள் கட்ட ரூ.3 லட்சம், கல்வீரம் பாளையம் அரசுயர் பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட ரூ.5 லட்சம், தாளியூர் பேரூராட்சியில் கழிப்பிடங்கள், குடிநீர் தொட்டிகள், ரேஷன் கடை கட்ட ரூ.7.35 லட்சம்,பூலுவப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி, சாலைகள் அமைக்க ரூ.3.70 லட்சமும், ஆலாந்துறை பேரூராட்சிக்கு ரூ.5 லட்சம், தென்கரை பேரூராட்சி வன்னியர் காலனியில் வெள்ளத் தடுப்பு சுவர் கட்ட ரூ.2.35 லட்சம், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் 25 தொகுப்பு வீடுகள் பழுதுபார்க்க ரூ.2.50 லட்சம், தீத்திபாளையம், மத்வராயபுரம் ஊராட்சிகளில் பள்ளிச் சுற்றுச் சுவர், குடிநீர் தொட்டி கட்ட 4.22 லட்சமும்தேவராயபுரம் ஊராட்சியில் காங்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.5 லட்சம், வடவள்ளி பேரூராட்சியல் தார் சாலை மற்றும் விளக்கு வசதிகள் ஏற்படுத்த ரூ.6.20 லட்சம் என ரூ.53.82 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் நகராட்சி: இங்கு 120 சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.5.04 லட்சம், இடையர்பாளையம் நடுநிலைப் பள்ளி சமையல் கூடம் மற்றும் ஸ்டோர் அறை கட்ட ரூ.1.13 லட்சம், பிருந்தாவன் நகரில் கம்பிவலையுடன் கூடிய சுற்றுசுவர் அமைக்க ரூ,.2.50 லட்சம் என ரூ.8.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments: