Thursday, August 2, 2007

காவு போகும் காவிரி நீர் உரிமை

விழுப்புரம் மண்டல மாநாட்டில் ‘காவு போகும் காவிரி நீர் உரிமை’ என்ற தலைப்பில் தலைமை நிலையச் செயலாளர் கே.எ°.இராதாகிருஷ்ணன் ஆற்றிய உரையில் இருந்து... (30.6.2007)

‘நடந்தாய் வாழி காவிரி’ என்று சிலம்பில் சொல்லப்பட்ட காவிரியின் வரலாறைப் பார்த்தால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், கரிகாற் சோழன் ஈழத்திற்குப் படை எடுத்துச் சென்று, அங்கு கைது செய்யப்பட்டு அழைத்து வந்த கைதிகளைக்கொண்டு கல்லணையைக் கட்டினான். காவிரி சமவெளியில் பாய்ந்தது அக்காலத்தில். இரண்டாம் நூற்றாண்டில் வீணாக தண்ணீர் உள்ளாறு என்கின்ற ஆற்றில் பாய்ந்து வெள்ளக் காடாக இருந்த சூழலில், கல்லணையைக் கரிகாலன் கட்டினான். அதுதான் நமக்கு கிடைத்த அடிப்படை ஆதாரம். அதற்குப்பிறகு பெரியபுராணத்திலும், வைணவப் பாசுரங்களிலும் சைவ இலக்கியங்களிலும் காவிரி சொல்லப்பட்டு இருக்கிறது. அங்கே குடகு நாட்டில் இருந்து தண்ணீர் வரவில்லை என்றவுடன், ராஜேந்திர சோழன் படை எடுத்துச் சென்றான்.

மூதறிஞர் இராஜாஜி சென்னை மாநில முதல்வராக இருந்தார். அவருடைய சிஷ்யர் அனுமந்தப்பா மைசூர் சமதானத்தில் திவான். ‘ஏ.அனுமந்தப்பா தண்ணீரை விடுகிறாயா இல்லை உன்னை அரெ°ட் செய்யட்டுமா?’ என்றார். உடனே, நீரைத் திறந்து விட்டார்கள். அப்படிப்பட்ட வரலாறுகள் இதற்கு உண்டு.

கண்ணம்பாடியில் அணை கட்டியது கர்நாடகம். சென்னை இராஜதானியும் அதற்கு அனுமதி தந்தது. ஒப்பந்தத்திற்கு மீறி அந்த அணை கட்டப்பட்டது.பிரச்சினை பிரிவியூ கவுன்சிலுக்குச் சென்றது. நீதிபதிகள் கர்நாடகம் கட்டியது சரி என்று சொன்னார்கள். சென்னை இராஜதானி மேல் முறையீடு செய்தார்கள். அந்த முறையீட்டின் மீது தீர்ப்பு அளித்த நீதிபதிகள், கர்நாடகம் கண்ணம்பாடியில் கட்டிய அணையின் அளவும் நீளமும் தவறு என்று குறிப்பிட்டார்கள்.

அதற்குப்பிறகு நீதிமன்றத்தில், ‘மைசூர் சம°தானமும் - சென்னை இராஜ தானியும் பேசவேண்டும்’ என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 1924 இல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதுதான் இன்றைக்குப் பிரச்சினைக்கு உரிய ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப்படி மைசூர் சம°தானம் நடந்து கொள்ளவில்லை.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என மாநிலங்கள் மாற்றி அமைக்கப் பட்டன. அப்பொழுது பாலக்காடு பகுதியில் கோவையை ஒட்டிய தமிழர் பகுதிகளில் சில கேரளத்தில் சேர்ந்தது. அந்தச் சமயத்தில் கேரளத்துக்காரன் காவிரியில் உரிமை கொண்டாடினான். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, குறிப்பாக 1969 இல் இருந்து காவிரிப் பிரச்சினை என்பது பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது.

அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறை கிடையாது. பொது மராமத்துத் துறைதான். அதற்குக் கலைஞர் கருணாநிதி அமைச்சர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சோஷலி°ட் கட்சி உறுப்பினர் நல்லசிவம், சட்ட மன்றத்தில் கேட்டார் - ‘அய்யா கருணாநிதி! நீ தஞ்சையில் பிறந்து இங்கு வந்து இருக்கிறாய். அங்கே மேலே 9 அணைகள் கட்டிக்கொண்டு இருக்கிறது கருநாடகம். நீ அதை எதிர்க்க வேண்டாமா? என்று கேட்கிறார். கலைஞர் அதற்குப் பதில் கூறவில்லை. அதற்குச் செயலாளர் IAS. அதிகாரி இராமச்சந்திரன். அவர் ஒரு கடிதம் எழுதுகிறார். இந்த மாதிரி 9 அணைகள் மேலே கட்டுகிறார்கள். மத்திய அரசுக்கு நீங்கள் எழுதுங்கள். நம் அனுமதி இல்லாமல் கட்டுகிறார்கள். இது தவறு என்று எழுதி, இவருடைய பார்வைக்கு வைக்கிறார். அதையும் கலைஞர் கண்டு கொள்ளவில்லை. இவை எல்லாம் கலைஞர் செய்த கேடுகள். அதனால்தான் காவிரிப் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளர்ந்தது.

அண்ணா மறைந்தவுடன் முதல்வர் ஆகிறார் கலைஞர். 1974 இல் மைசூர் அரசுக்கும் - தமிடிநநாட்டுக்கும் ஒப்பந்தம் நடக்கப்போகிறது. அப்போது சாதிக்பாட்சா அந்தத் துறையின் அமைச்சர். 488 டி.எம்.சி. தண்ணீர் தருவதாக கர்நாடகா ஒப்புக் கொண்டது. இரண்டு நாள் பேச்சுவார்த்தை பெங்களுரில் நடக்கிறது. சாதிக் பாட்சா பெங்களுர் சென்று இருக்கிறார். கலைஞர் கண் ஆபரேஷன் ஆகி ஓய்வு விடுதியில் இருக்கிறார். 488 டி.எம்.சி. நீருக்கு ஒப்புக் கொண்டார்கள். கையெழுத்துப் போடலாமா? என்று கேட்டபோது, ‘கையெழுத்துப் போட வேண்டாம், வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டார்.

1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், 50 ஆண்டுகளுக்குப் பின்னால் உட்கார்ந்து பேச வேண்டும் என்று ஒரு சரத்து இருக்கிறது. 1974 ஆம் ஆண்டில், இவர்தான் ஆட்சியில் இருக்கிறார். அதிலும் தவறி விட்டார். அதற்குப்பிறகு, காவிரி ஆயக்கட்டு விவசாயிகள் மன்னார்குடி ரங்கநாதன் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார்கள். எங்களுக்கு நடுவர் மன்றம் வேண்டும். அதனால்தான் எங்களது உரிமையை நிலைநாட்ட முடியும் என்று போட்டவுடன் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதற்கு இடையில் குறுக்குசால் ஓட்டுவதற்கு அன்றைக்கு அமைச்சராக இருந்த மன்னை நாராயணசாமியையும், தன் மருமகன் முரசொலி மாறனையும் வைத்து, இந்த வழக்கில் எங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனு போடுகிறார். அதில் இவர்கள் பார்ட்டியாக உள்ளே போய் விடுகிறார்கள். வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி இவரிடம், இந்த வழக்கை வாப° வாங்கிவிடுங்கள் என்று சொல்கிறார். நிர்ப்பந்தத்தின் காரணமாக பயந்துபோய் வழக்கை வாப° வாங்கி விட்டார். இப்படிப்பட்ட கேடுகள் செய்ததன் காரணமாகத்தான் காவிரிப் பிரச்சினையே வந்தது.

அதற்குப்பிறகு முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார். சட்டமன்றத்தில் நடுவர் மன்றம்தான் ஒரே வழி, நடுவர்மன்றம் வேண்டும் என்கிறார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி சொல்கிறார், நடுவர் மன்றமே தேவை இல்லை.நடுவர் மன்றம் வந்தால் ரொம்ப தாமதமாகி விடும் என்கிறார். இன்றைக்கு நடுவர் மன்றத்தை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார். நடுவர் மன்றம் எப்படி வந்தது? எம்.ஜி.ஆர். போட்ட வழக்கு - உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுத்தார்கள். அப்போது வி.பி.சிங்
அரசாங்கம். மத்திய அரசுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கிறார்கள். அந்த ஆணையின்படி, நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வி.பி.சிங்கும் வேறு வழி இல்லாமல் நடுவர் மன்றம் அமைக்கிறார். இது 1989 இல் நடந்தது. அப்போது கலைஞர் முதல்வராக இருக்கிறார். உடனே நான்தான் காரணம் என்கிறார்.

முதலில் நடுவர் மன்றமே வேண்டாம் என்றார். இன்றைக்குக் கலைஞரை ஆதரித்துக் கொண்டு இருக்கின்ற திராவிடர் கழக வீரமணி அப்போது இவரைக் கண்டித்து திருவாருரில் கைது ஆகிறார். அகண்ட காவிரி கருணாநிதியின் அலட்சியப் போக்கால் வறண்ட காவிரி ஆகிவிட்டது. இதற்கு முழு காரணமான கருணாநிதியைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க வேண்டும்.

1996 இல் ஆட்சிக்கு வந்தபோது காவிரிப் பிரச்சினையில் வேகம் காட்டினாரா? நடுவர் மன்றத்தில் 255 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு என்றைக்காவது ஆர்வம் காட்டினாரா? ஆனால், என்ன சொன்னார். காவிரியில் தண்ணீர் இருந்தால்தானே கர்நாடகம் விடும் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்வதா? அங்கே இருந்த தேவகௌடா என்ன செய்தார்? கர்நாடகத்திற்குச் சாதகமாக பேசினார். இதில் இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கருணாநிதியும் ஆதரித்து தேவகௌடா இந்தியப் பிரதமர் ஆகிறார்.

அப்போது நடுவர் மன்றத் தலைவராக இருந்தவர் சித்ததோஷ் முகர்ஜி. அவர் காவிரி டெல்டா பகுதிக்கு பிரச்சினைகளை அறிய வருகிறார். அப்படி வரும் போது பல இடங்களில் வரவேற்பு கொடுக்கிறார்கள். சால்வை, பரிவட்டம் போன்றவை எல்லாம் கட்டுகிறார்கள். பூரண கும்பம் மரியாதை தருகிறார்கள். இவை எல்லாம் சாதாரண காரியம். இதை வைத்துக்கொண்டு கர்நாடகா ஐகோர்ட்டில் தேவகௌடா ஒரு ரிட் பெடிஷன் போடுகிறார். சித்ததோஷ் முகர்ஜி தமிடிநநாட்டுக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும், அதனால் அவருக்குப் பதவியே இருக்கக்கூடாது என்றும் பெட்டிஷன் போடுகிறார். அந்த பெட்டிஷன் இன்னும் இருக்கிறது. அதில் பாண்டிச்சேரி, கேரளம், தமிடிநநாடு அரசாங்கங்கள் மூன்றையும் எதிரியாகச் சேர்த்து இருக்கிறார். அப்படிப்பட்டவர் கருணாநிதி ஆதரவுடன் பிரதமர் ஆகிறார்.

இப்படிப்பட்ட சறுக்கல்களுக்குக் காரணமாக இருந்த கருணாநிதி, ‘பொன்னியின் மைந்தன்’ என்கிறார். இப்படி இவருடைய பொறுப்பின் மையான அணுகுமுறையினால், அலட்சியத்தால் கடந்த காலங்களில் செய்த தவறுகளால், காவிரியில் நமது உரிமையே சீரழிந்து போய் விட்டது.

இனி என்ன செய்ய வேண்டும்?


நடுவர் மன்றம் பல்வேறு ஆண்டுகளுக்குப் பின் கொடுத்த தீர்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். அதை உடனடியாக பைசல் செய்ய வேண்டும். அதேபோல அரசு இதழில் நடுவர்மன்றத் தீர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். இந்த மூன்று கோரிக்கைதான் இங்கு பிரதான கோரிக்கைகள். இந்தக் கோரிக்கை களைக் கூட இன்றைய முதல்வர் கருணாநிதி கவனிக்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட அலட்சியப் போக்கினால் தான் காவிரியின் உரிமை பாழாகிறது - உரிமை பறிபோகிறது - காவு கொடுக்கப்படுகிறது.

தமிடிநநாட்டில் இயற்கை வளமே கிடையாது. கேரளாவில் மலைவளமும் - மழைவளமும் இருக்கிறது. கர்நாடகாவில் நல்ல நீர்வளம் இருக்கிறது. ஆந்திராவில் நல்ல மழைவளம் மற்றும் தாதுவளம் இருக்கிறது. ஆனால், தமிடிநநாட்டில் மனித ஆற்றல் மட்டும்தான் இருக்கிறது. நமக்கு என்று இருக்கின்ற ஒரே நதி தாமிரபரணி. வேறு எல்லா நதிகளிலும் வேறு மாநிலத்தை நம்பியே இருக்க வேண்டியது உள்ளது.

பாலாறு பாழாகிப் போயிற்று - கணேசபுரத்தில் அணைகட்டுகிறார்கள். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் எல்லாம் வீணாயிற்று. முல்லைப் பெரியாறில் நமது உரிமை பறிபோனது. காவிரியும் இப்படி இருக்கிறது. இந்த நிலையில் கருணாநிதி இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்ன செய்கிறார்? தில்லிக்கு மகள் கனிமொழி - தமிழகத்தில் ஆட்சிக்கு °டாலின் - கட்சிக்கு பாதுஷவாக அழகிரி. இப்படிச் செய்து கொண்டு இருக்கிறார் கருணாநிதி. இதுதான் அவரது அணுகுமுறை.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் தொடர்ந்து காவிரிப் பிரச்சினையில் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். பூம்புகாரில் இருந்து கல்லணை வரை பொதுச் செயலாளர் வைகோ நடந்தார். அதற்குப்பிறகு காவிரி உரிமை காப்புக் கூட்டங்கள் - போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். நடுவர் மன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என்று கடந்த காலங்களில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம். பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு காவிரிக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.

1 comment:

Unknown said...

Vdigattiya poi Saithigal ithu..., Neengal engu ullaigilo avargalaku "JALRA" thatuvathu than ungalku theirintha "Arasiyal Nermai, Pthuvalvil thuimai,....." Nenjai thottu solungal "Kavirika JJ oru thurumbai kill potirikar endru".

Neengal nadapathum seivathum onnum unmai illey