Sunday, August 5, 2007

மக்களின் நிலங்களைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம்! - வைகோ

டைட்டானியம் தாதுப் பொருள் நிறைந்து காணப்படுகிறது. இந்த இயற்கைக் கனிமப் பொருளைப் பயன்படுத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு, டாடா நிறுவனத்திற்காக சுமார் 16,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாகி உள்ளது.
துhத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், திசையன்விளை, கூத்தன்குழி ஆகியதேரிக்காடு பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது. இந்தப் பகுதிகளில் பனைத்தொழிலையும், இதர பயிர்த்தொழிலையும் நம்பி சுமார் 40 ஆயிரம்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை வளமும், நீர்வளமும், செழுமையும் நிறைந்த இந்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு, டாடா நிறுவனம் தொழிற்சாலை நிறுவுவதற்கு தமிழக அரசு,மக்களிடம் இருந்து நிலங்களைப் பறிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வு ஆதாரம் பறிபோகும் நிலை, அப்பகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இத்தகைய தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு,கடல்நீர் உட்புகும் அபாயமும் உருவாகும்.முதலில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளநிலங்கள் மட்டுமே டாடா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது பொதுமக்களிடம் இருந்து, சொற்பவிலையை நிர்ணயம் செய்து, நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிப்பதற்குத் தமிழகஅரசு முயற்சி செய்வதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நடுவண் அரசு, சிறப்புப் பொருளாதாரமண்டலச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி, தொழிற்சாலைகள்அமைவதற்கான நிலங்களை, அந்தந்த நிறுவனங்களே மக்களிடம் நேரிடையாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகஅரசு டாடா நிறுவனத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துவது ஏன்?
பாதிக்கப்படும் குடும்பங்கள் பல்லாயிரம்பேருக்கும், டாடா நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்கும் என்பதும் நடைமுறைக்கு வரக்கூடியது அல்ல. ஆகவே, தமிழக அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து,நெல்லை, துhத்துக்குடி மாவட்ட மக்களின்வாழ்வு ஆதாரங்களைப் பறிக்கும் நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். இல்லையெனில், இந்தியாவின் தென்பகுதியிலும் ஒரு ‘நந்திகிராமம்’ உருவாகும்சூழல் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன். தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க.ஆதரவை வழங்குவதுடன், மக்களோடுஇணைந்து மண் உரிமை காத்திடப்போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அன்று மாலையிலேயே தமிழக அரசு, டாடாதொழிற்சாலை மிகவும் அவசியம் என்று கூறிவிளம்பரமாகத் தந்த அறிக்கை, மறுநாள் பலஏடுகளில் பெரிய அளவில் விளம்பரமாக வந்தது.மக்கள் நலனை மனதில் கருதி, டாடாதொழிற்சாலை அமைவதைத்தடுக்க, மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்துhரில் 30ஆம் தேதி அன்று, மாபெரும் உண்ணாநிலை அறப்போர் நடத்தும் என்று துhத்துக்குடி மாவட்டச்செயலாளர் ஆருயிர்த்தம்பி ஜோயல் அறிவித்தார்.போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும்வேலையில் முழுவீச்சில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், ‘‘டாடாதொழிற்சாலை அமைவதை எதிர்த்துப் போராட்டம்நடத்துவோம் என்றும், நானே தலைமைதாங்குவேன்’’ என்றும் அறிவித்தார்.
ஏற்கனவே நாம் அறிவித்தவாறு, திட்டமிட்டபடிதிருச்செந்துhரில் ஐயா கே.பி.கே. சிலை அருகே, 30ஆம் தேதி அன்று காலையில் உண்ணாநிலைஅறப்போர், மாவட்டச் செயலாளர் ஜோயல்தலைமையில் நடைபெற்றது. இந்த அறப்போரில், சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் ஆருயிர்இளவல் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் அவர்களும்,மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்களும், ஒன்றிய, நகரச் செயலாளர்களும், உள்ளாட்சிநிர்வாகிகளும், அணிகளின் அமைப்பாளர்களும், கழகக் கண்மணிகளுமாக ஆயிரக்கணக்கானோர்பங்கு ஏற்ற போராட்டத்தைக் கழகத்துணைப்பொதுச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர்நாசரேத் துரை அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
முற்பகலிலேயே, நாசரேத் துரை அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, டைடானியம் தொழிற்சாலை தொடங்குவதை நிறுத்தி வைப்பதாக முதல் அமைச்சர் அறிவித்துவிட்டார் என்று கூறியபோது, நான் அவரது கைத்தொலைபேசி மூலமாகவே, உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறுகிற பந்தலில் இருந்த நம் அறப்போர் வீரர்களுக்கு வாழ்த்துச்சொன்னேன். அதனை ஒலிபெருக்கி மூலம் கேட்ட தோழர்கள் ஆரவாரித்தது என் செவிகளில்விழுந்தது. ‘‘மக்கள் பிரச்சினைக்காக நாம்நடத்துகின்ற போராட்டத்துக்குக் கிடைத்து உள்ளவெற்றி. தமிழக அரசு தற்போது பதுங்கிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் மாய்மால விளக்கங்களைத்தந்துவிட்டு, பின்னாளில் தொழிற்சாலைதொடங்க நினைத்தால், அதனை எதிர்த்துக்கடுமையான போராட்டத்தை நடத்துவோம். நானும் பங்கேற்பேன்.’’ எனக் கூறினேன்.
மாலையில், அண்ணா தி.மு.க. மாவட்டச்செயலாளர் சகோதரர் அனிதா இராதாகிருஷ்ணன் நமது உண்ணாநிலை அறப்போரை முடித்துவைத்தார். ‘எண்ணித் துணிக கருமம்’ என்பதுமுதல் அமைச்சருக்கு அடியோடு மறந்துபோய்விட்டதா? ஆராயாமல் செய்யும் காரியம், கேடாகத்தானே முடியும்? டாடா தொழிற்சாலையை எதிர்ப்போரெல்லாம், தேச விரோதிகள், சமுதாயக்கிருமிகள் என்றும் பண்பாடு அற்ற முறையில்விமர்சித்தாரே? இதற்காக என்னைக் கேலிசெய்து, அவர்களின் குடும்ப ஏட்டில் ஒரு கருத்துப்படமும் வெளியிட்டார்கள். சமுதாயக் கிருமிகள் பட்டியலில், தோழமைக் கட்சியினரையும் சேர்த்துவிட்டார் போலும். ஆம். தேச நலனை இவர்மட்டுமே குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்போலும். அரசாங்க விளம்பரத்துக்கு விரயமாக்கிய பணமெல்லாம், மக்கள் வரிப்பணம் அல்லவா?
சாத்தான்குளம் பகுதியில் இல்மனைட், மோனேசைட் போன்ற கனிமப் படிமங்களை சிலதனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக, அரசுஅனுமதி இன்றி வெட்டி எடுப்பதாகவும், கடத்துவதாகவும் தெரிய வந்ததால், இந்தத் தொழிற்சாலையை அமைக்க அரசு தீர்மானித்ததாக, அரசாங்கமே விளம்பரம் செய்துஉள்ளது. சட்டவிரோதமான காரியங்களைத் தடுப்பதற்குத்தானே அரசாங்கம் இருக்கிறது? சட்டமும், காவல்துறையும், நிர்வாகமும் இருக்கிறது? எனவே, அரசின் விளக்கம் என்பது, புண்ணுக்குப் புனுகு தடவும் வேலை.
நம் தோழர்களுக்கு ஒன்றைக் கவனப்படுத்த விரும்புகிறேன். பொதுமக்கள் பிரச்சினைக்காக துhத்துக்குடி மாவட்டச் செயலாளர் முன்யோசனையோடு எடுத்த நடவடிக்கையும், தோழர்களைத்திரட்டி நடத்திய போராட்டமும், நாட்டு நலன்ஒன்றே நமது குறிக்கோள் என்பதை, அப்பகுதிவாழ் மக்கள் மனதில் ஆழப்பதித்து இருக்கிறது.
தமிழக மக்களின் நலன் ஒன்றே நமது நோக்கம், நமது செயல், நமது அணுகுமுறை என்றஅடிப்படையில்தான் கடந்த 13 ஆண்டுகளாக நாம் இயங்கி வருகிறோம் என்பதை ஏடுகள்மறைத்தாலும், உண்மைகளை நிரந்தரமாக இருளில் தள்ள முடியாது. வெளிச்சத்துக்கு வந்தேதீரும் எனும் நம்பிக்கையுடன் கடமை ஆற்றுவோம்.
பாசமுடன்,
வைகோ
--------------------------------------------------------------------------------------------------------

No comments: