Friday, October 26, 2007

மதிமுக கூட்டத்தில் திமுக பயங்கர வன்முறை: தரக்குறைவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நேற்று இரவு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது பொதுக்கூட்ட மேடையில் கல் மற்றும் பெட்‌ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் தாக்குதலுக்கு உள்ளான நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தட்ஸ்தமிழ் செய்தி (25.10.2007):

வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2007

வத்தலக்குண்டு: வந்தலகுண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குறித்து நாஞ்சில் சம்பத் கீழ்த்தரமாக பேசியதால் ஆத்திரமடைந்த திமுகவினர் பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். மேடையில் இருந்த மதிமுக பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந்நிலையில் கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாக மதிமுக மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற மதிமுக பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பல்வேறு குட்டித் தலைவர்கள் பேசி முடித்த நிலையில் இரவு 10 மணிக்கு மைக்கைப் பிடித்தார் நாஞ்சில் சம்பத்.திமுக அரசை தனது வழக்கமான தீப்பொறிப் பேச்சால் தாக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் கருணாநிதி குறித்து மிக மட்டமாக பேச ஆரம்பித்தார்.

இந் நிலையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கற்களை வீசியபடி கூட்டத்துக்குள் புகுந்தது. அவர்களை தடுக்க மதிமுகவினரும் அதிமுகவினரும் முயன்ற நிலையில் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்துக்குள் பெட்ரோல் நிரப்பட்ட பாட்டில்கள் எரிந்தபடியே வந்து விழுந்து வெடிக்கவே மதிமுகவினரும் அதிமுகவினரும் கலைந்து ஓடினர்.

அடுத்தபடியாக அங்கு கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்து எரிந்த அந்த கும்பல், நாற்காலிகளையும் தூக்கி வீசியது. கூட்டம் அலறியடித்துக் கொண்டு கலைந்து ஓடிய நிலையில் மேடையில் ஏறிய அடாவடிக் கும்பல் மாவட்ட அவைத் தலைவர் அருள் சாமியை தலையில் அரிவாளால் வெட்டியது.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் சரிந்தார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டு, அனைவருக்கும் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதில் நாஞ்சில் சம்பத், மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர்.

இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர்களையும் தரக்குறைவாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தலகுண்டு திமுகவினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் லாட்ஜில் தங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இரவோடு இரவாக ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2007/10/25/tn-mdmk-leader-nanjil-sampath-arrested-dindigul.html

--------------------------

மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது பின் வரும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன:
நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்)...
திமுக தலைவர் மு. கருணாநிதி சுப்ரீம் கோர்ட் தடையையும் மீறி சட்ட விரோதமாக பந்த் நடத்தினார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நீதிமன்ற தடையையும் மீறி சட்டத்திற்க்கு உட்பட்ட 'சனநாயக(?!)' கடமையாம், ஆனால் பிற கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுவதாகுமாம். அப்பாவி மக்களுக்கு அமைதியாக அவர்களின் பிரச்சனையை விளக்கினால் சட்டவிரோதமா? வாழ்க சனநாயகம்.

148 (தாக்குதல் நடத்த சதி)...
தாக்குதல் நடத்த சதி செய்தார்களா? அதற்கு என்ன ஆதாரம்? தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

324 (காயம் ஏற்படுத்துதல்)...
மதிமுக-வினரை அரிவாளால் வெட்டியும், கற்களையும், பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியும் அட்டூழியம் செய்த திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்)...
கருணாநிதியும் திமுகவில் உள்ள இன்னபிற தலைவர்களை(?!) விடவா ஆபாசமாக பேசாததைவிடவா இவர் பேசிவிடப் போகிறார்?

506 (கொலை மிரட்டல்)...
யாருக்கு கொலை மிரட்டல் விட்டார்? சத்தமில்லாம காரியத்தையே முடிக்கின்ற இந்த காலத்தில் இப்படி எல்லாம் மேடை போட்டு பேசினாலும் சனநாயக முறையில் மேடையிட்டு சவால் விட்டால் அது மிகப்பெரிய தவறுதானே!

மதுரையில் 3 அப்பாவிககளைக் கொன்ற அழகிரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சிபிஐ விசாரணை என்ன ஆயிற்று? தா. கிருட்டிணனைக் கொன்ற கொடும்பாவி அழகிரியைக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? தனது பொருப்பற்ற பேச்சால் ஓசூரில் 2 அப்பாவித் தமிழர்கள் உயிருடன் எரிக்கப்படக் காரணமாக இருந்த கருணாநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இவர் பேசிய பேச்சால்தானே இரு தமிழ் உயிர்களை நாம் இழந்தோம். அவரின் பொருப்பற்ற பேச்சுக்கு என்ன தண்டனையளிக்கப்பட்டது? கண்துடைப்புக்காக அமைக்கப்படும் விசாரணைக் கமிசன்கூட அமைக்கப்படவில்லையே!

திமுகவினர் ஆட்சியில் இல்லாதபோதே இதுபோன்ற அநியாங்களைச் செய்வார்கள். இப்பொழுது கேட்கவும் வேண்டுமா?? என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வார்கள். வாழ்க ஜனநாயகம்...

ஞாநி பத்திரிக்கை சுதந்திரத்தின் அடிப்படையில் கருணாநிதியை விமர்சித்து எழுதினால், இவர்களின் முகமூடியை கிழித்து வீசினால்... கண்டனக் கூட்டமொன்றைக் கூட்டி ஞாநி பார்ப்பான், முற்போக்கு முகமூடியணிந்து எழுதும் பார்பன பரதேசி என்றும், ஞாநிக்குப் பார்ர்பனத் திமிர் அதிகம் என்றும், பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியான் என்றும் எனச் சாடுவர். அதனால் ஞாநி மனதளவில் பாதிக்கப்படுவார்.

ஆனால் நாஞ்சில் சம்பத்தை பபர்ப்பன பரதேசி என்று திட்ட முடியாதல்லவா! வெறுமனே பரதேசி எனத் திட்டினால் நாஞ்சில் சம்பத் அல்லது பிற மதிமுகவினர் அப்படி மனதளவில் பாதிக்கப்படுவார்களா? மாட்டார்களல்லவா!! அதனாலதான் இப்படித்தாக்குதல் நடத்துகின்றனர்.

இது இன்று நேற்றல்ல... மதிமுக ஆரம்பித்த காலம் முதல் பல இன்னல்கள் திமுகவிடமிருந்து வந்த வண்ணம்தான் உள்ளன.

அது என்னவோ வைகோ, மதிமுக, சங்கு (சங்கொலி) என்றாலே கலைஞருக்கும் திமுகவுக்கும் பயம் வந்து விடுகிறது. நிதானத்தை இழந்துவிடுகிறார்கள். 'ராமரை'க் கூட அனாயசமாக சமாளிக்கும் அவர்களுக்கு மதிமுகவினரைக் கண்டால் உள்ளூர ஒரு உதறல் இருக்கிறது. ஒரு வேளை கலைஞருக்காவே கூட இருந்த உழைத்ததால், கலைஞரின் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதாலோ?

நான் முன்பு குறிப்பிட்டதப்போல ஞாநி கருணாநிதியை விமர்சனம் செய்து எழுதினால் "ஆரிய ஞாநி", "பாலியல் பாடம் நடத்தும் பார்ப்பன வாத்தியார்" என கண்டனக் கூட்டம் நடத்துவார்கள். பாவம் அவர்களால் நாஞ்சில் சம்பத்தை பார்ப்பான் என சொல்லி திட்ட இயலாது. அவர்கள் இயலாமையைக் காட்ட இப்படித்தான் எதாவது செய்து தாக்குதல் நடத்துகிறார்கள். நடத்தட்டும்... நடத்தட்டும்... இது இவர்களுக்கு மதிமுக-வின் வளர்ச்சிமேல் உள்ள பய உணர்வையே காட்டுகின்றது.

இது குறித்து இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாஞ்சில் சம்பத்தை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments: