வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொங்கல் புத்தாடைக்கு வழி இன்றி, வீட்டுக்குப் புதுச் சுண்ணாம்பு பூசக் காசு இன்றி, அவதிப்படும் அவலம். மின் வெட்டாலும், உரத் தட்டுப்பாட்டாலும், பயிர்க்கடன் வழங்காகக் கொடுமையாலும், தங்கள் விளைபொருளுக்கு லாபகரமான விலை இன்றியும் துயர்ப்படும் விவசாயிக்கு, இந்தத் தைத்திருநாளுக்குப் பின்னராவது, வேதனை தீரட்டும் விடியல் உதிக்கட்டும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும் இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
3 comments:
மிகச் சிறந்த பணிகளை செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் கழக செய்திகளை update செய்து பதிவிட வேண்டுகிறேன். பாசமுடன்,தியாகராஜன்.
மிகச் சிறந்த பணிகளை செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் கழக செய்திகளை update செய்து பதிவிட வேண்டுகிறேன். பாசமுடன்,தியாகராஜன்.
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தியாகராஜன். தாங்கள் கேட்டுக்கொண்டது போல் இன்னும் அதிகமாக கழகச் செய்திகளை வெளியிட முயற்சிக்கிறோம்.
- சக்தி
Post a Comment