Tuesday, October 16, 2007

என் சவாலுக்கு என்ன பதில்? - வைகோ

அறைகூவல் விடுவது, அதனை நிருபிக்காவிட்டால் அரசியலை விட்டே விலகுகிறேன் எனச் சவால் விடுவது எனக்கு வழக்கம் அல்ல. வாடிக்கையும் அல்ல. அப்படிச் சவால் விடுவதெல்லாம் கலைஞர் கருணாநிதி அவர்களுக்குக் கைவரப் பெற்ற கலை என்பதை நாடு அறியும். அப்படியானால், ஏன் இப்போது அறைகூவல் விடுத்தேன்? முதல் அமைச்சருக்குச் சவால் விடுத்தேன்? வரலாற்று ஏடுகளில், காலப் பெட்டகத்தில், இந்நாள் முதல்வர் கலைஞர் அப்பட்டமான பொய்களைத் திட்டமிட்டுப் பதிவு செய்வதும், தான் பாடுபடாத, பணி ஆற்றாத ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடி, பொய்யான புகழைச் சூடிக்கொள்ள முனைவதும், வருங்காலத் தலைமுறையினருக்குப் பொய்களே உண்மை ஆகும் விபரீதம் நேரும்: ஆதலால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்த உண்மைகளை நிலைநாட்டவே, நான் அறைகூவல் விட நேர்ந்தது.

செப்டெம்பர் 30 ஆம் நாள் சென்னையில் நாம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பேசியது இதுதான்: “சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அண்ணாவின் கனவுத் திட்டம். அது இந்த நாட்டுக்குத்தேவை என்று, அந்தத் திட்டத்தை, பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களை அறிவிக்க வைத்த இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். நான் கேட்கிறேன்: ஏதோ இதற்காகவே அவதரித்ததைப்போல் ஊர் மக்களிடம் பேசுகிற முதல்வர் அவர்களே, நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது, இந்த சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்று நீங்கள் தில்லிக்குப் போடீநு எந்தப் பிரதமரிடமாவது பேசியது உண்டா? கோரிக்கை வைத்தது உண்டா? நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவில்தான் அரசு நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தி.மு.கழகத்தின் 25 எம்.பி.க்களின் தயவில்தான் பிரதமர் இந்திரா அரசு நடந்தபோது, அண்ணாவின் கனவு என்று இப்போது சொல்கிறீர்களே, அதைப் பற்றி பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் சொன்னீர்களா? வற்புறுத்தினீர்களா?

1971 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடன் இருந்து தேடிக்கொடுத்த வெற்றியின்
காரணமாக, மீண்டும் முதல்வர் ஆனீர்களே, அப்போது பிரதமரைச் சந்தித்துக் கேட்டீர்களா? ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரிடத்தில் பேசினீர்களா? அதற்குப்பிறகு வி.பி.சிங் பிரதமரானபோது திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அமைச்சர் அவையில் பங்கு ஏற்றதே, அந்தக் காலகட்டத்தில், அவரைச் சந்தித்து இந்தத் திட்டம் வேண்டும் என்று கேட்டீர்களா? நரசிம்மராவ் அவர்களிடம் பேசினீர்களா? தேவே கௌடா பிரதமராகப் பொறுப்பு ஏற்றபோது, அதிலும் பங்கு ஏற்றீர்களே, அவரிடத்தில் பேசினீர்களா? ஐ.கே. குஜ்ரால் பிரதமராக ஆனாரே, அவரிடத்தில் பேசினீர்களா?

நீங்கள் எந்தப் பிரதம மந்திரியிடமாவது தில்லியில் சேது சமுத்திரக் கால்வாடீநுத் திட்டம் தமிடிநநாட்டுக்குத் தேவை என்று எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசினீர்களா? நீங்கள் நான்கு முறை முதல்வராக இருந்தபோது கேட்டு இருக்கிறீர்களா?

மறுமலர்ச்சிப் பேரணியில் வாஜ்பாய் அறிவிக்கப் போகிறார் என்று உங்களுக்கு ரகசியத் தகவல் தெரிந்தபிறகு, மாலை 5 மணிக்கு விழுந்து அடித்து ஓடி, ராஜ் பவனுக்குச் சென்று ஒரு மனு கொடுத்தீர்கள். அதற்கு முன்பு, மூன்று மாத காலமாக நான் இதே வேலையாக இருக்கிறேன், எப்படியாவது அறிவிக்க வைக்க வேண்டும் என்று. அதற்கு முன்பு நீங்கள் இந்தத் திட்டத்திற்காக வாதாடி இருப்பதாக நிருபித்து விட்டால் அரசியலை விட்டு விலகிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

ஒரு பயங்கரமான பொய்யை, நேற்றைக்கு முன்தினம் புதுக்கோட்டையில் அவிடிநத்துவிட்டு இருக்கிறார் பாருங்கள், உலகத்தில் வேறு எவனும் இவரிடம் கிட்டே வர முடியாது பொடீநு சொல்வதில். கோயபல்சாவது, ஒன்றாவது? நேற்றைக்கு முன்தினம் சொல்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்றது, மன்மோகன்சிங் பொறுப்பு ஏற்றார். இரண்டே இரண்டு கோரிக்கைகளைத்தான் வைத்தேன். ஒன்று தமிடிந உணர்வுப்பூர்வமானது. இன்னொன்று தமிழர் வாxவு ஆதாரப்பூர்வமான சேதுக் கால்வாடீநுத் திட்டம்’ என்கிறார்.

நான் கேட்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அரசு அமைந்த அந்தக் காலகட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதற்கு, டாக்டர் மன்மோகன் சிங்குக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டு இருந்த அந்த நேரத்தில், அவர்கள் அதற்காக வேலையில் ஈடுபட்டு இருந்த வேளையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் நிறைவேற்றப்பட தயாரிக்கப்பட்ட நேரத்தில், அவர்களிடத்தில் சேதுக்கால்வாய்த் திட்டத்தைப் பற்றி நீங்கள் பேசியது உண்டா? புதுக்கோட்டையில் போய்ப் பொய் சொல்கிறீர்களே? இது உண்மை என்று நிருபித்து விட்டால், மீண்டும் சொல்கிறேன், ‘பொதுவாழ்வில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன்.’’ இதைத்தான்,அக்டோபர் ஒன்றாம் நாள் கடலூரில் வந்தியத்தேவன் இல்ல மணவிழாவிலும், அக்டோபர் நான்காம் நாள், கருரில் செய்தியாளர்களிடமும் நான் வலியுறுத்தினேன்.

என் குற்றச்சாட்டை மறுப்பதற்கு அவரிடம் ஆதாரம் இல்லை. என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், அவருக்கே உரிய அகட விகட சாமர்த்தியத்தால், முற்றிலும் திசைதிருப்பி ஒரு விளக்கத்தை அளித்து உள்ளார்.

என் கேள்வி இதுதான். அறிஞர் அண்ணா மறைந்தபின்பு, 1969 முதல் 1998 செப்டெம்பர் வரை பல காலங்களில், கலைஞர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலங்களில், எந்தப் பிரதமரிடமாவது தில்லியில் சேதுக்கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று, எழுத்து மூலமாக வற்புறுத்தி, நேரடியாகப் பேசி இருக்கிறாரா?

1969 இல், 1971 இல், 1989 இல், 1996 இல் நான்கு முறை முதல்வரானபோது, இந்தத் திட்டத்தை வலியுறுத்தி எந்தப் பிரதமரிடமும் இவர் கோரிக்கை வைக்கவே இல்லை. தமிழர்களின் நுhற்றாண்டு காலக் கோரிக்கை யான அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டத்தை, நிறைவேற்ற வேண்டும் என்று, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வற்புறுத்தினாரா? கிடையவே கிடையாது. தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவர் செய்யவே இல்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. ‘அப்படி அவர் இதற்காக வாதாடியதாக நிருபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’ என அறிவித்தேன்.

தமிழக முதல்வர் ஏழாம் தேதி அன்று விடுத்து உள்ள அறிக்கையில், என் கேள்வியையே திரித்து, ‘சேதுத் திட்டத்துக்காகக் கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாகக் கோரிக்கை வைத்ததை நிருபித்தால், நான் அரசியலைவிட்டே விலகிக் கொள்கிறேன்’ என்று நான் பேசியதாகக் கூறி விளக்கம் அளித்து உள்ளார். 2002 மே 8 ஆம் நாள், அவர் பிரதமர் வாஜ்பாடீநுக்கு எழுதிய கடிதத்தையும், 2002 அக்டோபர் 15 இல் எழுதிய கடிதத்தையும், சாட்சிக்கு
அழைத்து உள்ளார்.

இதனால், ஒன்று தெளிவு ஆகிறது. என் குற்றச்சாட்டை அவரால் மறுக்க முடியவில்லை. அதனால்தான், 1998 இல், பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டம் குறித்து, நான்கு ஆண்டுகள் கழித்து 2002 இல் அவர் கடிதம் எழுதியதைக் காட்டுகிறார். ஆனால், அவரிடம் அரசியல் பெருந்தன்மை அணு அளவும் கிடையாது என்பதால்தான் அவர் எழுதிய அந்தக் கடிதத்தில்கூட, 98 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 15 இல், மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய அண்ணா-பெரியார் பிறந்தநாள் விழாப் பேரணியில், சென்னைக் கடற்கரையில், பிரதமர் வாஜ்பாய், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும்’ என்று உறுதி அளித்ததைக் குறிப்பிடவே இல்லை.

இவரது அரசியல் வக்கிரப்போக்கை நான் குறிப்பிட்டதால், அவருக்கே உரித்தான புரட்டு வார்த்தைகளில், தற்போது அக்டோபர் 8 ஆம் தேதி அவர் விடுத்த அறிக்கையில், ‘பிரதமர் வாஜ்பாய், வைகோவின் நிகழ்ச்சியில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை அறிவித்ததாகச் சொல்லி உள்ளேனே? அதைக்கூட உணராமல், நுனிப்புல் மேய்ந்து உள்ளதாகச் சாடி உள்ளார்.

நான் கேட்டதெல்லாம், பிரதமர் வாஜ்பாய்க்கு 2002 இல் இவர் எழுதிய கடிதத்தில், பிரதமர் 98 ஆம் ஆண்டு அறிவித்த வாக்குறுதியைக் குறிப்பிட ஏன் மனம் இல்லை? என்பதுதான்.

ஆனால், சங்கொலியில், 2005 ஜூலை 8 ஆம் நாள், கழகக் கண்மணிகளுக்கு நான் எழுதிய கடிதத்தில், 1958 இல், தமிழகச் சட்டமன்றத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்துப் பேசியதை வரிவிடாமல் பதிவு செய்து இருக்கிறேன்.

1960 அக்டோபர் 9 இல், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இத்திட்டத்துக்காக உரை ஆற்றிய அறிஞர் அண்ணா அவர்கள், 67 இல் முதல்வர் ஆனவுடன், இதற்காக மத்திய அரசை வலியுறுத்த, தமிழகம் முழுவதும் ‘எழுச்சி நாள்’ கொண்டாடினார். அண்ணாவின் கனவை நனவாக்க, எளியவனான நான், எடுத்த முயற்சிகள் எண்ணில் அடங்கா. எண்பதுகளில் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். கேள்விகள் தொடுத்து இருக்கிறேன்.

1998 ஜூலை 6 இல், நாடாளுமன்ற மக்கள் அவையில், இத்திட்டத்துக்காக உரை ஆற்றினேன். சேதுக் கால்வாடீநுத் திட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் என்று, பிரதமர் வாஜ்பாடீநு அவர்களை அறிவிக்கச் செடீநுவதற்காகவே, 1998 செப்டெம்பர் 15 இல், சென்னையில் மறுமலர்சசிப் பேரணி நடத்தினோம். நிகடிநச்சிக்குப் பிரதமரிடம் ஒப்புதல் பெற்ற நாள் முதல், நான்கு மாத காலத்தில் பலமுறை வாஜ்பாடீநு அவர்களைச் சந்தித்து, திட்டத்துக்காக வற்புறுத்தினேன். தொலைநோக்கும், உயர் பண்பும் கொண்ட வாஜ்பாய் அவர்கள், அறிவிப்பதாக உறுதி அளித்தார். அப்படியே அறிவிக்கவும் செய்தார்.

செப்டெம்பர் 15 இல் பிரதமர் இதை அறிவிக்கப் போவதாக நான் பலரிடமும் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், அதனை அறிந்துகொண்ட அந்நாள் முதல்வர் கலைஞர், அன்று மாலை, ஐந்து மணிக்கெல்லாம் ராஜ் பவனுக்குச் சென்று, இத்திட்டத்துக்காக மனு ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்து வைத்தார்.

தி.மு.க. மாநாடுகளிலும், பொதுக்குழு, செயற்குழுவிலும் இத்திட்டத்துக்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமரிடத்தில் வலியுறுத்தும் கடமையில், முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி தவறினார்.

தொடக்கத்தில், ‘நாம் தமிழர் இயக்கத்’ தலைவர் சி.பா. ஆதித்தனார், காங்கிரசின் கே.டி. கோசல்ராம் குரல் கொடுத்த இத்திட்டத்தை நிறைவேற்ற, அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் வற்புறுத்தலால், அந்நாள் பிரதமர் பண்டித நேருவின் அமைச்சரவை, 1963 இல், இத்திட்டத்துக்கு ஒப்புதல் தந்து, பின்னர் இலங்கையின் எதிர்ப்பால் கிடப்பில் போட்டது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, 1986 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள், ‘சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலங்கள் அவையில் கோரிக்கை விடுத்து உள்ளார். நான் எழுப்பிய இன்னொரு குற்றச்சாட்டுக்கும், கேள்விக்கும் முதல்வரிடம் பதிலே இல்லை. அதுதான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 இல் அமைந்தபோது, அதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை, டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும், பிரணாப் முகர்ஜி அவர்களும் தயாரித்தபோது, நான் நேரடியாக அவர்களைச் சந்தித்து, சேதுக்கால்வாய்த் திட்டத்தை அக்குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வற்புறுத்தி, எழுத்து மூலமாகக் கோரிக்கை விண்ணப்பம் தந்து, அதில் இடம்பெறச் செடீநுதேன்.

அசோகா மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடந்தபோது, பிரணாப் முகர்ஜி அவர்கள் என்னிடம், ‘உங்கள் சேதுக்கால்வாய்த் திட்டம், அரசின் செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது’ என்றார். இதனை நினைவில் வைத்துத்தான், 2005 செப்டெம்பர் 3 ஆம் நாள், எனது நூலை வெளியிட்டுப் பேசிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், ‘வைகோவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம்’ எனக் குறிப்பிட்டார்.

‘மத்திய அமைச்சரவையில் சேரப் போவது இல்லை’ என்று சென்னையில் அறிவித்த கலைஞர் கருணாநிதி, தில்லியில் ஒரு வாரம் முகாமிட்டதே, அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காகத்தான்.

ஆனால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இவர் சொல்லவும் இல்லை, கோரிக்கை தரவும் இல்லை, இதுகுறித்து டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் பேசவும் இல்லை. ஆனால், மத்திய அரசு நிறைவேற்றப் போகிறது என்று கலைஞரிடம் நான் சொல்லவும் செய்தேன். இதற்குப் பின்னரே, கப்பல் போக்குவரத்துத் துறையைத் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கினார்.

ஆனால், அண்மையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், நா கூசாமல், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், சேதுக்கால்வாடீநுத் திட்டத்தை வற்புறுத்தியதாக, ஒரு பச்சைப் பொய்யைத் துணிந்து அவிழ்த்து விட்டார். அன்றுவரை, அவர் எங்கும் பேசாத ஒன்று இது. அப்படி, அவ்வாறு மன்மோகன்சிங் அரசிடம் வற்புறுத்தியதாக நிருபித்தால், நான் பொதுவாழ்வை விட்டே விலகுகிறேன் என அறைகூவல் விடுத்து இருந்தேன். முதல் அமைச்சர் கருணாநிதி தந்து உள்ள விளக்கங்களில், இதற்குப் பதிலே இல்லை.

ஒருவர் உழைக்க, வேறு ஒருவர் அறுவடை செய்வது சுரண்டல் என்பதால், சேதுக் கால்வாய்த் திட்டத்திலும், முதல் அமைச்சர் கலைஞர் செய்த அரசியல் சுரண்டலை, பித்தலாட்டத்தை, வெளிப்படுத்தி, நடந்த உண்மை என்ன என்பதை வரலாற்றில் பதிவு செய்யவே நான் சவால் விடுத்தேன்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல, வளமான வர்ணனை வார்த்தைகளுக்கு இடையில் பொய்களைச் சொருகுவதில், ஈடு இணையற்ற வல்லவர் கலைஞர் ஆவார். அதனால்தான், 2002 மே மாதம் 8 ஆம் நாள், பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இதைக்குறித்து வலியுறுத்தி உள்ளேன்’ என்று, அப்பட்டமான ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைப் பதித்து விட்டார்.

--------------------------------
சங்கொலி (19.10.2007)

No comments: