இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும்இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே,
“இரண்டு நாட்கள் நிகடிநந்து இருக்கக்கூடாதா?”
“இரண்டு நாள் மாநாடாக இருந்திருந்தால், இன்னமும் நன்றாக இருந்திருக்கும்”
“ஒருநாள் மாநாடாக முடிந்ததில், கொஞ்சம்ஏமாற்றம்தான்”
எவ்வளவு பிரமாண்டமான பந்தல். எத்தனை எழிலார்ந்த ஏற்பாடு. அந்தக் கண்கொள்ளாக் காட்சி மேலும் ஒருநாள்நீடித்து இருந்தால், இன்னும் எவ்வளவோ சிறப்புஅல்லவா?இதே பேச்சுத்தான் நம் தோழர்களிடம் எங்குபார்த்தாலும். கடந்த 13 ஆண்டுகளில், நாம் நடத்திய மாநாடுகள்ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.விழுப்புரம் மண்டல மாநாடு ஏற்படுத்திய எழுச்சியும்,உணர்ச்சியும் ஈடற்றதாகும்.
அழகுக் கலையின்,சித்திரக்கூடமாக அலங்காரம் செடீநுயப்பட்ட பந்தல்.திராவிட இயக்கத்தலைவர்கள், மேல்மாடங்களில்அமர்ந்தவாறு, நமக்கு வாடிநத்தும், ஆணையும்பிறப்பிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தையேஏற்படுத்திக் காட்டிவிட்டார் பந்தல் நாயகன் சிவா.அந்த மாநாட்டுப் பந்தலில் கம்பீரமாகப் பறந்த கழகக்கொடிகள்.
தமிடிநநாட்டின் பிரதான ரயில் பாதைக்கும்,முக்கிய நெடுஞ்சாலைக்கும் இடையில் அன்றோமாநாட்டுப் பந்தல். நாள்தோறும் பலஇலட்சக்கணக்கான பயணிகள், பதினைந்துநாள்களுக்கு முன்னரே அமைக்கப்பட்ட பந்தலைக்கண்டு வியந்தனர். விண்ணின் தாரகைகளை எல்லாம்தோரணமாக ஆக்கியதுபோல் கட்டப்பட்டவிளக்குகளின் ஒளிவெள்ளத்தின் பிரகாசம்.பார்ப்போருக்குப் பிரமிப்பு ஊட்டியது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இரவு பகலாகக்கடுமையாக உழைத்த வரவேற்புக் குழுத் தலைவர் -விழுப்புரம் மாவட்டச் செயலாளர் டாக்டர் மாசிலாமணிஅவர்களின் திட்டமிட்ட பணிக்குக் கிடைத்தமகத்தான வெற்றி இம்மாநாடு. இரண்டு நாள்களுக்குமுன்னதாகவே, விழுப்புரத்துக்கு வந்து சேர்ந்த நான்,மாநாட்டுப் பந்தலில் இருந்தவாறு, நடைபெற்றபணிகளுக்குத் துணையாக இருந்தேன்.
மாநாட்டுக்கு முதல்நாள் காலையில், முன்னணியினர்அனைவரிடமும் தொலைபேசியில் நான்உரையாடியபோது, பயணத்துக்கு ஆயத்தப்படுவதைச் சொன்னார்கள். மாநாட்டைத் திறந்துவைக்க, அறிவிக்கப்பட்ட சகோதரரிடமும் பேசினேன்.27 ஆம் தேதி மாலையில்தான் சிதம்பரம்அண்ணாமலை நகரில், அவர் என்னோடு இருந்தார்.மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்திரு ஸ்ரீதர் வாண்டையார் அவர்களின் இல்லத்திருமண வரவேற்பிலும் என்னோடு பங்குஏற்றுவிட்டு, என்னை வழி அனுப்பியும் வைத்தார்.
29 ஆம் தேதி காலையில் என்னிடம் பேசும்போது,வாண்டையார் வீட்டு நிகடிநச்சியில் நான் கலந்துகொண்டதைச் சிலாகித்தும் சொன்னார். இன்றுஎந்நேரம் வருகிறீர்கள்? என்று நான் கேட்டபோது,“இதோ புறப்பட்டு விட்டேன். நண்பகலுக்குள் வந்துவிடுவேன்” என்றார். மாநாட்டுப் பந்தலில்மாலையில், பக்கத்துக் கிராமங்களிலே உள்ளபொதுமக்கள் சாரைசாரையாக வந்து, பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர்.இரவு, 8.00 மணி ஆயிற்று. ஏன் இன்னும் வரவில்லைசிதம்பரத்தில் இருந்து அந்தச் சகோதரர்? ஒருவேளை, காலையில் திறப்பாளர் உரை அல்லவா,தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பார் போலும் என்றுஎண்ணினேன். சற்று நேரம் ஆனவுடன்,கைத்தொலைபேசியில் அவருடன் பேசமுயன்றபோது, மறுமுனை கைத்தொலைபேசிஒலித்தாலும், பேசுவது தவிர்க்கப்படுவதைஉணர்ந்தேன்.
தொடர்ந்து பலமுறை முயன்றதற்குப்பின்னர், மறுமுனையில் கைத்தொலைபேசிஒரேயடியாக நிறுத்தப்பட்டு விட்டது என்பதைஅறிந்தேன். அப்போதுதான், அன்றைய நாள் இதடிநஒன்றில், அவர் கழகத்தில் இருந்து விலகக்கூடும்என்ற செடீநுதி வெளியாகி இருந்ததைத் தோழர்கள்மூலம் அறிந்தேன்.துளியும் என்னால் நம்ப முடியவில்லை. நள்ளிரவுவரை மாநாட்டுப் பந்தலில் இருந்தேன். அவரைநேரில் சென்று அழைத்துவர அந்த இரவில்,நெல்லிக்குப்பம் இராதாகிருஷ்ணன் அவர்களையும்,உற்ற தம்பி அடைக்கலம் அவர்களையும் அனுப்பிவைத்தேன். தூங்கவே இல்லை. மனதில்இனம்புரியாத வேதனை வாட்டிக் கொண்டு இருந்தது.
விடியற்காலை மூன்றரை மணி அளவில்,சிதம்பரத்தில் இருந்து தொலைபேசியில் நான்அனுப்பி வைத்தவர்கள் சொன்ன தகவல், “அவர்வீட்டில் இல்லை என்று சொல்லுகிறார்கள். இரவுபத்து மணிக்கு மேல் வேறு ஒரு காரில் போடீநுவிட்டார்.எங்கு சென்றார் என்று தெரியாது எனக்கூறுகிறார்கள்” என்றனர்.“ ஒரு மணி நேரம் கழித்துத்திரும்பவும் முயற்சித்துப் பாருங்கள்” என்றேன்.அதிகாலை நாலரை மணி அளவிலும் அதேபதில்தான் அவர்களுக்குக் கிடைத்தது.மனம் பாறையாகக் கனத்தது.
விடிந்தால் மாநாடு.மாநாட்டுத் திறப்பாளர், அன்பு, பாசம் என்றகதவுகளை ஒரேயடியாக மூடி விட்டார்.இலட்சோபலட்சம் தோழர்கள் தங்கள் வாடிநவின்சுகங்களைத் தியாகம் செடீநுதுவிட்டு, துன்பங்களைச்சுமந்து கொண்டு, நம்மோடு அணிவகுத்துவருகிறார்களே, அந்தத் தூய உள்ளங்களுக்காக நாம்ஆற்ற வேண்டிய கடமையில் பின் வாங்கவா முடியும்?சோர்ந்து முடங்கவா இயலும்?காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொடரத்தானே வேண்டும் நம் பயணத்தை. நாளைக்குமாநாடு ஆயிற்றே, சற்று நேரமாவது தூங்கிவிழித்தால்தானே நல்லது என்று எண்ணியவாறுசற்றுக் கண் அயர்ந்தேன்.
பொழுதுபுலரும்வேளையில், ஆறு மணிக்கெல்லாம் திரும்பவும்முயற்சித்துப் பார்ப்போமே என்று தொலைபேசியில்பேசிட முயன்றேன். ஆனால், பேசத் தயாராக இல்லை- தவிர்க்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.பல ஆண்டுகளாகப் பழகிய என் தோழர்களிடம் நான்கொண்டு உள்ள அன்பும், பாசமும் எல்லை அற்றது.ஆழம் காண முடியாதது. தன்னலம் இல்லாதது. அதில்ஒருவரை இழக்க நேர்ந்தாலும் என் இருதயத்தில்இரத்தம் கசியும். முள்ளாகக் குத்தும். எந்தக் குறையும்நான் வைக்கவில்லை அந்தச் சகோதரருக்கு.எனது சகோதரர்களும், சகாக்களும் உயர்வு பெறவேண்டும். நம் இயக்கம் உன்னதமான நிலையைஅடைய வேண்டும் என்பதுதானே என் வேட்கை -என் ஏக்கம் - என் ஆசை - என் கனவு எல்லாம்.
நம்மை விட்டு விலகிச் சென்றவர் எடுத்த முடிவு,திடீரென்று எடுத்த முடிவாகத் தெரியவில்லை.மாநாட்டுப் பணிகளைத் திட்டமிடுவதற்கும், ஆடீநுவுசெடீநுவதற்கும் மூன்று முறை விழுப்புரம் மாநாட்டுத்திடலுக்கு நான் சென்றபோது, ஒருமுறை கூட அவர்அங்கு வராதது குறித்து நான் கடுகு அளவும் சந்தேகம்கொள்ளவில்லை. அவ்வளவு நம்பிக்கை வைத்துஇருந்தேன். இயக்கத்தைவிட்டு வெளி ஏறியவர்கள்,வேறு வழி இன்றிச் செடீநுகின்ற விமர்சனத்தையும்,தருகின்ற விளக்கத்தையும் நாம் பொருட்படுத்தத்தேவை இல்லை.
கடந்த 13 ஆண்டுகளில், ஒருசில காலகட்டங்களில்,சிலர் நம்மைவிட்டு விலகிச் சென்று விமர்சித்தவேளையிலும், நான் ஆத்திரப்பட்டது இல்லை.இழிமொழி பேசியது இல்லை, நிந்தித்ததும் இல்லை.நம்மோடு இருந்து பணியாற்றிய நாள்களை,பாராட்டிய செடீநுதிகளை மனத்தில்அசைபோட்டவாறு, அவர்கள் சென்ற இடத்தில்நன்றாக இருந்தால் சரிதான் என்றுதான் இயங்கிவருகிறேன்.ஆம். மாநாட்டுப் பந்தலை நான் காலை ஒன்பதரைமணிக்கு அடைந்தபோது, தெளிவும், திடமும், உரமும்,ஊக்கமும் கொண்டு கொடிக்கம்பத்தைநெருங்கினேன். ஆருயிர் பத்மநாபன் கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை உயர்த்தினார். பட்டொளிவீசிப் பறந்தது. மாநாட்டைத் திறந்து வைப்பது யார்?என்பதைத் துணைப் பொதுச் செயலாளர்களிடமும்,வரவேற்புக் குழுத் தலைவர் உள்ளிட்ட மாவட்டச்செயலாளர்களிடமும், முன்னோடிகளிடமும் கலந்துஆலோசித்து, திராவிட இயக்கத்தின் தியாகக்குடும்பத்து வழித்தோன்றல், பேராசிரியர்கே.என்.இராமச்சந்திரன் அவர்கள் மாநாட்டைத்திறந்து வைக்க முடிவு செடீநுதோம்.
அறிவிக்கப்பட்ட திறப்பாளர் ஏன் வரவில்லை? என்றபேச்சே பந்தலில் எழவில்லை என்பது இராணுவத்தைவிஞ்சிய கழகத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்காட்டியது. மறுமலர்ச்சி ஏவுகணை நாஞ்சில் சம்பத்பட்டிமன்றம் நடத்திய அந்தப் பட்டப் பகலிலேயேபந்தலைத் தாண்டியும் கண்ணுக்கு எட்டிய தூரம்வெள்ளமாடீநுத் திரண்டு விட்ட கழகக்கண்மணிகளைக் கண்டு இறும்பூது எடீநுதினேன்.யாமிருக்க எதுபற்றி உனக்குத் தயக்கம்? என்றஉறுதியின் ஒளிக்கீற்றை, அவர்களின்விழிப்படலங்களில் தரிசித்தேன்.
நமது பொருளாளர் ஆருயிர் அண்ணன் கண்ணப்பன்அவர்களுக்கு சில நாள்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சிகிச்சை மேற்கொண்டதால்,காலை நிகடிநச்சிக்கு அவர் வர இயலவில்லை.கோவையில் இருந்து அவர் புறப்பட வேண்டியவிமானம் காலையில் இரத்து ஆகிவிட்டதால்,மாலையில்தான் கோவையில் இருந்து அவர் புறப்படமுடிந்தது. விமான நிலையத்தில் இருந்து நேராகமாநாட்டு மேடைக்கு வந்தார்கள். அறிஞர்அண்ணாவின், முழு நம்பிக்கையைப் பெற்று இருந்தஅண்ணன் இரா.செழியன் அவர்களும் வந்தார்கள்.அண்ணா தி.மு.க. அவைத்தலைவரும், மாவட்டச்செயலாளரும் வந்தனர்.காலையில் நெல்லை அபுபக்கரும், பிற்பகலில்ஒரத்தநாடு கணேஷ் - கோபு குழுவினரும் சிறப்பாகநடத்திய இசை நிகடிநச்சிகள் மாநாட்டுக்கு மெருகுஊட்டின.
நமது சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவரும், அந்தத் துறையின் நிகரற்ற சூரர்கள். மணிக்கணக்கில் உரை நிகடிநத்தி, கேட்போரைச் சொக்கவைக்கும் இந்தத் தீரர்கள் எடுத்துக் கொண்ட நேரம்மிக மிகக் குறைந்த நிமிடங்கள்தான். இடியாடீநு,மின்னலாடீநு, மழையாடீநு, பந்தலில் திரண்டுஇருந்தோரின் இதய வானங்களை நிறைத்தார்கள்.இரவு 9.10க்கு நான் உரையைத் தொடங்கும்போதுமனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் நாடுஎங்கும் இருந்து வந்து குவிந்து உள்ளனர். மகளிர்கூட்டமோ, இதுவரை இல்லாதது. எனவே, இரவு பத்துமணிக்கு மேல், தாங்கள் புறப்பட வேண்டியவாகனங்களை நாடி, கொஞ்சம், கொஞ்சமாக எழுந்துசெல்லும் நிலை ஏற்படும் என்று எண்ணினேன்.
ஆனால், என்ன ஆச்சரியம்? இரவு பதினோரு மணிக்குநான் உரை முடிக்கும் வரையிலும், இலட்சக்கணக்கில்குவிந்து இருந்தவர்களுள் ஒருவரும்அசையவில்லை... சிலைகளாக அன்றோ அமர்ந்துஇருந்தனர். அந்தக் காட்சியே, என் நரம்புகளைமுறுக்கு ஏற்றிற்று. இரத்தத்தில் மின்சாரத்தைச்செலுத்தியது. அதில் ஏற்பட்ட உணர்ச்சிதான்,°காட்லாந்து விடுதலைக்கு இராபர்ட் புரூ°அமைத்த வீரப் போர்க்களக்காட்சியை நான் விவரிக்கவைத்தது.
வெற்றி. வெற்றி. - மாபெரும் வெற்றி.
-இம்மாநாட்டின் வெற்றி, வைகறைப் பொழுதில்,தலைநகர் வந்து சேர்ந்த நான் மறுநாள் இரவுவரையிலும், தொலைபேசி மணி ஒலிக்கும் போதுஎல்லாம் கவலையோடு கையில் எடுத்தேன்.பத்திரமாகத் தோழர்கள் ஊர் போடீநுச் சேர்ந்துவிட்டார்களா? எந்தச் சிறுவிபத்தும் இன்றி,பாதுகாப்பாக வீடு திரும்பினார்களா? என்பதுதான்அக்கவலை.
சாதித்துவிட்டோம் என்ற நிம்மதிப்பெருமூச்சு எனக்கு.தோழர்களே, பத்திரிகை தர்மம் என்பது எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு எவ்வளவோ நாள்கள் ஆகிவிட்டன.சிறிய கூட்டத்தைக்கூடப் பெருங்கூட்டமாக,பொடீநுயான தோற்றம் காட்ட முயலுகின்றன சிலஏடுகள். ஆனால், விழுப்புரம் அரசியல் வரலாறுசந்தித்து இராத மக்கள் வெள்ளமான நம் மாநாட்டின்வெற்றியை எழுத அவர்களுக்கு மனம் இல்லை.கூட்டத்தைப் படமாக வெளியிடவும் மனம் இல்லை.
"பதினான்கு மணி நேரம் நடைபெற்ற மாநாட்டில்காணப்பட்ட கட்டுப்பாட்டை, ஒழுங்கை, டா°மாக்போதைக்கு இடம் இல்லாத பண்பாட்டை, ஒரு வரிஎழுதுவதற்கும் கூட, எந்த நாளேட்டுக்கும், வாரஏட்டுக்கும் மனம் இல்லை."
நாம் எவ்வளவு கடுமையான சக்திகளை எதிர்த்துப்பயணிக்க வேண்டியது உள்ளது என்பது இதில்இருந்து தெளிவு ஆகிறது.
ஏடுகளில் உண்மைச்செடீநுதியை வெளியிட்டால், தர்பாரின் கோபத்துக்குஆளாக நேருமே என்கிற பயம்தான் காரணம்.ஆனால், காலம் மாறும். காட்சிகள் மாறும், இந்தநிலைமையும் மாறித்தான் தீரும்.நமது மாநாட்டு வெற்றி குறித்து, நூற்றில் ஒருபங்குகூட உண்மை எழுத மனம் இல்லாத ஏடுகளுள்- ஒன்றிரண்டு ஏடுகள், நம்மைக் களங்கப்படுத்துவதற்கு, காயப்படுத்துவதற்கு, விடம் தடவியஈட்டியை எறியும் வேலையில் மும்முரம்காட்டுகின்றன.
ஆம், குடியரசுத் தலைவர் தேர்தல்குறித்து அந்த வேலையைக் காட்டுகின்றனர்.குடியரசுத் தலைவர் தேர்தலில் எவருக்கும் வாக்குஅளிப்பது இல்லை என்ற முடிவு குறித்துத் தேர்தல்ஆணையம் வெளியிட்ட கருத்து, பல்வேறு விதமாகவிளக்கங்களுக்கு, ஊகங்களுக்கு இடம் அளித்தது.சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றஉறுப்பினர்களும் வாக்கு அளிக்கக்கூடாது என்றுநிர்பந்திக்கக் கூடாது.
அவ்விதம் செடீநுதால், பிரச்சினைஏற்படலாம் என்ற நிலையில், ஜூலை 19ஆம் நாள்அன்று, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னையிலும்,புதுவையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்தில்லியிலும், வாக்கு அளிக்கப் போகிறார்கள் என்று,நமது சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றஉறுப்பினர்களும் என்னிடம் தெரிவித்தபோது,“தமிடிநநாட்டில் அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணிஅமைத்து, ஒற்றுமையாகச் செயல்படுகிறோம்.அவர்கள் வாக்கு அளித்தால், நீங்களும் வாக்குஅளித்துவிடலாம்” என்றேன்
.நமது பொருளாளர் அண்ணன் கண்ணப்பன்அவர்களும், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்சகோதரர் இராமகிருஷ்ணன் அவர்களும்,சிகிச்சைக்குப் பின் ஓடீநுவு பெற்று வருவதால்,அவர்கள் சென்னைக்கு வரவில்லை. ஐக்கியமுற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர், கடுமையானஉண்மைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். அந்தக்கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்கும்சிந்தனைக்கே நம்மிடத்தில் இடம் இல்லை.இந்த நிலையில், தமிடிநநாட்டில் நடந்த வாக்குப் பதிவில்,அண்ணா தி.மு.க. அணியில் இருந்து நான்குவாக்குகள் காங்கிர° கூட்டணி வேட்பாளருக்குக்கிடைத்து உள்ளதாகவும், புதுவை மாநிலத்தில்அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு வாக்குகாங்கிர° அணிக்கு விழுந்து உள்ளதாகவும்செடீநுதிகள் வந்தன.
இதுகுறித்து, ஒரு ஆங்கில நாளேடு விசமத்தனமாகச்செடீநுதி வெளியிட்டது. மறுமலர்ச்சி தி.மு.க. சட்டமன்றஉறுப்பினர்களை காங்கிர° வேட்பாளருக்கு வாக்குஅளிக்குமாறு, நான் கூறியதாகச் சொல்லப்படுகிறதுஎன்பதுதான் அந்த நச்சுச் செடீநுதி. ஒரு தமிடிநநாளேடும், அத்தகைய சந்தேக விதையைச் தூவிஇருக்கிறது. அண்ணா தி.மு.க.வுடன் நாம் கொண்டுஇருக்கும் கூட்டணி தர்மத்துக்குக் குன்றிமணிஅளவும் குந்தகம் எண்ணாமல் இயங்கி வருகிறோம்.நாணயத்துக்கும், நம்பிக்கைக்கும் இம்மி அளவும்மாசு ஏற்படாமல், செயல்பட்டு வருகிறோம்.நமது இயக்கம் திறந்த புத்தகம்.நமது பாதை நேர்மையானது. விழுப்புரம் மாநாடு, நமக்கு ஊட்டி உள்ளஉத்வேகத்தோடு, கழகப் பணி ஆற்றுங்கள்.எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள்வளரட்டும்.
பாசமுடன்
வைகோ.
No comments:
Post a Comment